முக்கியச் செய்திகள்

கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்படி 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் சராசரி அடிப்படையில் 50 மதிப்பெண்களும், 11ம் வகுப்பில் 20 விழுக்காடும், 12ம் வகுப்பில் செய்முறை மற்றும் அகமதிப்பீட்டில் 30 விழுக்காடு மதிப்பெண்களும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு முடிவுகள் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 60-வது நாளாக குறைந்துள்ளது. சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு 100-ஐ கடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, பக்ரீத் பண்டிகை தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ‛ஈத் முபாரக்! ஈத்-உல்-ஆதாவுக்கு வாழ்த்துக்கள். அதிக நன்மைக்கான சேவையில் நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தை கொண்டு, இந்த நாள் கூட்டு பிரார்த்தனைகளின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்,' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் கமெண்டரியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளின்போது “இந்தி டப்பிங்கில் 'மாஸ்டர்' படத்தை எனது மகளுடன் மிகவும் ரசித்துப் பார்த்தேன். அவரது நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. விஜய் நல்ல நடிகர்” என்று குறிப்பிடுள்ளார்.